பொங்கல் பண்டிகை – 2019 (பிரிவு – 1 & பிரிவு-2)


    பொங்கல் பண்டிகை - 2019 (பிரிவு – 1)

    தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் திருவிழா பிரிவு – 1 ன் சார்பாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவிகள் இணைந்து கூட்டுப் பொங்கள் வைத்து மாணாக்கர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கல்லூரி அலுவலர்களுக்கும் வழங்கினர். முனைவர் S.R. சேவியர் ராஜ ரத்தினம் துணை முதல்வர் (கல்விப்பிரிவு) அவர்கள் விழாவில் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு அண்ணா சரவணன், அணைக்கட்டு வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள் விழாச் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் சிறப்புகள், இன்றைய இளைய தலைமுறையினர் மறந்து வரும் நம் பாரம்பரியங்கள், உலகம் போற்றும் தமிழர் பண்பாடுகள் குறித்துப் பேசினார். கல்லூரி மைதானத்தில் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு ஓட்டம், மிதவேக மிதிவண்டிப் போட்டி, கபடி, ஓட்டப்பந்தயம், பல்திறன் போட்டிகள், கோலப்போட்டி என நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வென்ற மாணாக்கர்களுக்கு விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வுகளைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பொன்.செல்வகுமார் அவர்கள் நெறிப்படுத்தினார். இவ்விழாவின் இறுதியில் அருட்தந்தை முனைவர் தியோஃபில் ஆனந்த் அவர்கள் மாணாக்கர்களுக்கு விழா வாழ்த்துக்களைக் கூறி நிகழ்வினை நிறைவு செய்வித்தார். இவ்விழாவில் தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்வுகள் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.

    பொங்கல் பண்டிகை – 2019 (பிரிவு-2)

    தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் திருவிழா பிரிவு – 2 ன் சார்பாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவிகள் இணைந்து கூட்டுப் பொங்கள் வைத்து மாணாக்கர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கல்லூரி அலுவலர்களுக்கும் வழங்கினர். அருட்தந்தை முனைவர் தியோஃபில் ஆனந்த்துணை முதல்வர் (பிரிவு-2) அவர்கள் விழாவில் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருமதி நா.அழகம்மை, ஆசிரியர், Our Lady தொடக்கப்பள்ளி, திருப்பத்தூர் அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணாக்கர்களை நடுவராக இருந்து தெரிவுசெய்தார். மேலும் விழாச் சிறப்புரையும் ஆற்றினார். அவரது உரையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் சிறப்புகள், இன்றைய இளைய தலைமுறையினர் மறந்து வரும் நம் பாரம்பரியங்கள், உலகம் போற்றும் தமிழர் பண்பாடுகள் குறித்துப் பேசினார். கல்லூரி மைதானத்தில் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு ஓட்டம், மிதவேக மிதிவண்டிப் போட்டி, கபடி, ஓட்டப்பந்தயம், பலூன் உடைப்பு, கொஞ்சம் நடிங்க பாஸ், கிஸ்சிங் த சார்ட், பல்திறன் போட்டிகள், கோலப்போட்டி என நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வென்ற மாணாக்கர்களுக்கு விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் இறுதியில் அருட்தந்தை முனைவர் தியோஃபில் ஆனந்த் அவர்கள் மாணாக்கர்களுக்கு விழா வாழ்த்துக்களைக் கூறி நிகழ்வினை நிறைவு செய்வித்தார். இவ்விழாவில் தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்வுகள் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.

    Commissions
    Education and Culture